பெண் சப் இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு வந்திருந்த பெண் ஒருவர், அவரைப்போல தேர்வு எழுத வந்திருந்த சிலரின் செல்போன்களை திருடிச் சென்ற சம்பவம் திண்டுக்கல்லில் நிகழ்ந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அக்ரஹாரப்பட்டியைச் சேர்ந்தவர் சங்கையா.
இவரது மகள் சற்குணம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இவர் கடந்த 26ஆம் தேதி தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சார்பு ஆய்வாளர் தேர்வுக்காக திண்டுக்கல்லில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் தேர்வு எழுதச் சென்றுள்ளார். அங்கு வந்திருந்தவர்கள் செல்போன் மற்றும் பர்ஸ் ஆகியவற்றை உள்ளே எடுத்துச் செல்லக்கூடாது என்ற நிபந்தனையால், தேர்வு மையத்தின் வெளியே ஒரு பெரிய அட்டைப் பெட்டியில் தேர்வர்களின் செல்போன் மற்றும் பர்ஸ்களுக்கு நம்பர் டோக்கன் ஒட்டப்பட்டு பாதுகாப்பாக வைத்துவிட்டுச் சென்றனர்.
தேர்வு முடிந்த பின்பு, மூன்று பேரின் விலை உயர்ந்த செல்போன்கள் திருடு போனது தெரிய வந்தது. உடனடியாக அங்கிருந்தவர்களிடம் சற்குணம் விசாரித்துள்ளார். யாருக்கும் தெரியாத காரணத்தால் சற்குணம், உடனடியாக ரெட்டியார்சத்திரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார். சற்குணத்தின் செல்போன் சிக்னலை காவல்துறையினர் ஆய்வு செய்தபோது திருடப்பட்ட அந்த செல்போன், வேடசந்தூர் பகுதியில் இருப்பது தெரியவந்தது.
தீவிர விசாரணையில் சப் இன்ஸ்பெக்டர் தேர்வு எழுத வந்த வேடசந்தூரைச் சேர்ந்த சுதா(29) என்ற பட்டதாரிப் பெண், மற்றவர்களின் செல்போன்களைத் திருடிச் சென்றது தெரிய வந்தது. வேடசந்தூர் விரைந்த தனிப்படை காவல்துறையினர், குங்குமகாளியம்மன் கோவில் தெருவில் பதுங்கி இருந்த சுதாவை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவலர் தேர்வு எழுத வந்த பெண் களவாணித்தனம் செய்து மாட்டிக் கொண்ட சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
– ராயல் ஹமீது.