தேசிய பாம்புகள் தினத்தை முன்னிட்டு பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்.ராஜா அவர்கள் தலைமையில் wild habitat conservation trust தன்னார்வ அமைப்பு சேர்ந்த திரு ரசித் அவர்களின் தலைமையான பாம்பு
பிடிக்கும் தன்னார்வலர்களால் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பாம்புகளை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வையும் பாம்பு கடியில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளும் விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் செய்து காட்டி விளக்கமளிக்கப்பட்டது.
இதில் பாம்பு பிடி தன்னார்வலர்கள் பல்வேறு வகையான பாம்புகள் குறித்தும் பாம்புகளிடம் இருந்து எவ்வாறு தம்மை பாதுகாப்பது குறித்தும் விளக்க கருத்துகளை பொதுமக்களுக்கு விரிவாக விரிவுரை ஆற்றினர்.
இதில் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர்.வனஜா.மாரிமுத்து. ராஜலட்சுமி செவிலியர்கள் மற்றும் நோயாளி நலச் சங்க உறுப்பினர்கள் வெள்ளை நடராஜ் கவிஞர். முருகானந்தம் நகரமன்ற உறுப்பினர். சாந்தலிங்கம் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.