பிரான்மலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் நவீன ஆய்வகம்!
அமைச்சர்கள் திறந்து வைத்தனர்!
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. 24 மணி நேர பிரசவ வசதி, அவசர சிகிச்சைப் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, ரத்தப் பரிசோதனை ஆய்வகம், கர்ப்பிணிப் பெண்களுக்கு முழு பரிசோதனை மற்றும் ஸ்கேன் உள்பட அனைத்து வசதிகளும் உள்ளதாக இந்த ஆரம்ப சுகாதார நிலையம் திகழ்கிறது.
இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் 38 வகையான பரிசோதனைகள் செய்து வந்த நிலையில், பொதுமக்களுக்கு மேலும் பலன் தருவதற்காக 92 வகையான பரிசோதனைகள் செய்யும் வகையில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகராக ₹.50 லட்சம் மதிப்பீட்டில் நவீன ஆய்வகம் கட்டப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நேற்று பிரான்மலையில் இந்த நவீன ஆய்வகத்தை தமிழ்நாடு மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் சிவகங்கை பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத், சுகாதார பணிகளுக்கான மாவட்ட துணை இயக்குனர் விஜய் சந்திரன் மற்றும் ஏராளமான பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நவீன ஆய்வகம் வெகுவிரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இதே நிகழ்வில் மல்லாகோட்டை, முனைவென்றி ஆகிய ஊர்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ₹.1.02 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டன.
விழாவின் இறுதியில் பிரான்மலை வட்டார மருத்துவ அலுவலர், மருத்துவர் நபிஷா பானு நன்றியுரை நிகழ்த்தினார்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.