தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் டி.எம்.பி. மெக்கவாய் கிராமிய ஆரம்பப் பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. 15 வயது முதல் எழுதப்படிக்க தெரியாதவர்களுக்கு எழுத்தறிவு எண்ணறிவு திட்டத்தை ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் தொடங்கி வைத்தார்.
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட, முற்றிலும் எழுதப்படிக்க தெரியாதவர்களை அடையாளம் கண்டு; அவர்களுக்கு தன்னார்வலர்களை கொண்டு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு கல்வி வழங்கப்பட உள்ளது. இதன் வாயிலாக, கல்வி அறிவு இல்லாதவர்கள் இல்லாத நிலையை உருவாக்க முடியும்.
மேலும், துாய்மை பாரத விழிப்புணர்வு, உடல்நலம், சுகாதாரம், சுற்றுப்புறச்சூழல் அறிவு, வாக்காளர் உரிமை , சாலை பாதுகாப்பு, முதலுதவி, அடிப்படை சட்டங்கள் குறித்தும் விளக்கப்படுகிறது.
15 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் முதல் கட்டமாக தேர்வுசெய்யப்படுகிறார்கள். 2027-ம் ஆண்டுக்குள் 5 கோடி பேருக்கு கல்விகற்பிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. புதிய தேசிய கல்விக் கொள்கை 2020-ன் பரிந்துரை அடிப்படையில் வயது வந்தோருக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம் சார்பில் இப்பணி நடைபெற்ற வருகிறது. இது சார்ந்த விழிப்புணர்வு முகாம் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது .
இந்த விழாவில் ஓட்டப்பிடாரம் வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா அவர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் கணபதி அவர்கள் , மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை வனஜா மங்கள செல்வி அவர்கள், ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன் அவர்கள், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரெங்கராமானுஜம் மற்றும் ஆசிரியர் கணேஷ்குமார் ஆசிரியைகள் பள்ளி மாணவ மாணவிகள் , தன்னார்வளர் முத்துமாரி, மற்றும் ஊர்மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.