வெள்ளையனுக்கு எதிராக முதன் முதலில் வீரப்போர்புரிந்த சுதந்திரப் போராட்ட மாவீரர் மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 308வது பிறந்ததினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெட்கட்டான்செவல் அரண்மனையில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆணைக்கிணங்க அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மூத்த நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
2017 ஆம் ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டு மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் பிறந்த நாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. நெற்கட்டும்செவலில் உள்ள நினைவு மாளிகை மற்றும் திருமண மண்டபம் ரூபாய் 50 லட்சம் மதிப்பில் 2018 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டு சீரமைக்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் அவர்கள் , திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் , தளவாய் சுந்தரம் அவர்கள், செல்லூர் ராஜ் அவர்கள் , ஆர்பி உதயகுமார் அவர்கள் , ராஜன் செல்லப்பா அவர்கள் , ராஜலட்சுமி அவர்கள் , கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் , தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் எஸ் பி சண்முகநாதன் அவர்கள் , இசக்கி சுப்பையா அவர்கள், கருப்பசாமி பாண்டியன், சுதா பரமசிவன் அவர்கள், சீனிவாசன் அவர்கள், செல்லப் பாண்டியன் அவர்கள், நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நெல்கட்டும்செவல் கிராமத்தில் பூலித்தேவன் நினைவைப் போற்றும் வகையில் பூலித்தேவன் நினைவு மாளிகை, திருமண மண்டபம் ஆகியவற்றை அமைத்துள்ளது. இந்த நினைவு மாளிகையின் முகப்பில் பூலித்தேவன் முழு அளவு திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு ஆயிரம் பேர் அமரக்கூடிய அளவில் திருமண மண்டபம் கட்டப்பட்டுள்ளது. பூலித்தேவன் காலத்து நினைவுச் சின்னங்கள் மற்றும் ஆயுதங்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக சுதந்திர போராட்டத்தில் தென் மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், மாமன்னன் சுந்தரலிங்கம், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், ஒண்டிவீரன் என பல்வேறு வீரர்கள் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்க பல்வேறு போராட்டங்களில் தியாகங்களையும் செய்தனர்.
அந்த வரிசையில் இந்திய வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்டவர் மாமன்னர் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரது 308-வது பிறந்தநாள் செப்டம்பர் 1-தேதி கொண்டாடப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.