தூத்துக்குடி சங்கர் காலனி 2வது தெருவைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் மகன் சைலபதி (51). தூத்துக்குடி பிரையன்ட் நகரில் உள்ள ஒரு ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு துறைமுகம் மதுரை பைபாஸ் சாலையில் மீன்வளக் கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக வந்த லாரி அவரது பைக் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற லாரியை போலீசார் தேடி வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஶ்ரீவைகுண்டம் நிருபர்,
-முத்தரசு கோபி.