ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக்குளம் கிராமத்தில் கால்வாய் தூர்வாரும் பணியை ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா அவர்கள் துவங்கி வைத்தார்!
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே ஆரைக்குளம் கிராமத்தில் கால்வாய் தூர்வாரும் பணியை ரூபாய் 12.50 கோடி மதிப்பில் இன்று காலை ஒட்டப்பிடாரம் சட்ட மன்ற உறுப்பினர் எம் சி சண்முகையா தொடங்கி வைத்தார்.
பல ஆண்டுகளாக ஓட்டப்பிடாரம் பகுதிகளில் கன மழை காரணமாக வெள்ள நீர் வீணாக கடலில் கலப்பது மற்றும் விவசாய நிலங்களையும் அழித்து வருகிறது முறையாக ஓடைகளையும் கால்வாய்களையும் தூர்வாரி தண்ணியை சேமித்து வைக்க பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்திருந்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கடந்த 2015 ஆம் ஆண்டு உப்பாறு ஓடை நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் கோரம்பள்ளம் குளத்தில் அதிக அளவு வெள்ளம் ஏற்பட்டது. திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக கோரம்பள்ளம் குளம் திடீரென அதிகபட்ச நீர்மட்டத்தை எட்டியதால் உபரி நீர் போக்கியில் உள்ள 24 மதகுகளின் மூலம் 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டது . திடீர் நீர்வரத்து காரணமாக கோரம்பள்ளம் குளத்தில் உபரி வாய்க்கால்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் உப்பாத்து ஓடையில் கரைகளில் உடைப்புகள் ஏற்பட்டு அருகில் உள்ள பகுதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது அனைத்து உடைப்புகளும் போர்கள் அடிப்படையில் தற்காலிகமாக சரி செய்யப்பட்டது.
உப்பாறு ஓடை ஆரைக்குளம் அணைக்கட்டு வழியாக ஓட்டப்பிடாரம் பெரியகுளம் கண்மாய்க்கு தேவையான குறுக்கு வடிகால் பணிகளுடன் 2650 மீட்டர் நீளத்திற்கு புதிய திருப்பு கால்வாய் வெட்டுதல் மேலும் ஆரைக்குளம் ஓட்டப்பிடாரம் பெரியகுளம் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய்களை பழுதுபார்த்தல் மற்றும் 1400 மீட்டரில் பாலம் கட்டுதல்.
உப்பாத்து ஒடை 6200 மீட்டர் நிலத்திற்கு உப்பாத்து ஒடையின் இருபுறமும் கரைகளை மறுசீரமைத்து பலப்படுத்தவும் இடதுபுற வெள்ள கரைகளை பலப்படுத்தும் 323 மீட்டர் நிலத்திற்கு பாதிப்புகள் ஆன இடங்களில் வெள்ளத் தடுப்பு சுவர் கட்டுவது.
இந்தப் பணியை செய்வது மூலம் ஓட்டப்பிடாரம் பெரிய குளத்தின் 100 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட குளத்தின் மூலம் ஏழு ஊராட்சி ஒன்றிய குளங்கள் பயனடையும்.
இந்த நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் யூனியன் சேர்மன் ரமேஷ் அவர்கள் மற்றும் ஓட்டப்பிடார ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் வட்டாட்சியர் சுரேஷ் அவர்கள் துணை வட்டாட்சியர் ஸ்டாலின் அவர்கள் மற்றும் ஆரைக்குளம் பஞ்சாயத்து தலைவி சங்கரி செல்வம் அவர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர் முனியசாமி.