பொள்ளாச்சி: பொள்ளாச்சி நேதாஜி வழிஅரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ச.தர்மராஜ் தலைமை தாங்கினார் .
பெற்றோர் ஆசிரியர் கழக துணைத்தலைவர் குமரன் நகர்.காளிமுத்து. துணைச் செயலாளர் கவிஞர்முருகானந்தம் பள்ளி வளர்ச்சி குழு தலைவர் வெள்ளை நடராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் இரா.சித்ராதேவி அவர்கள் வரவேற்புரையாற்றினார் பள்ளி மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் வழங்கி தொடங்கி வைத்து சிறப்புரை வழங்கினார்.
மேலும் மாவட்ட கல்வி அலுவலர் கேசவமூர்த்தி அவர்கள் மாணவர்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்தும் மாணவர்கள் எவ்வாறு கல்வியை நேசித்து முன்னுக்கு வர வேண்டும் என்பது குறித்தும் மாணவிகளிடையே பல்வேறு கருத்துக்களை உரையாற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற உறுப்பினர்கள் பாத்திமா, கவிதா, செல்வக்குமார் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு நிர்வாகிகள்.ஆசிரியர்கள் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்
முடிவில் பெற்றோர் ஆசிரியர் கழக செயலாளர் ஜெய்லாப்தீன் நன்றி கூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.