பேரறிஞர் அண்ணா பிறந்த தினத்தில் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் பொள்ளாச்சி நகராட்சி 26 வது வார்டில் காந்தி மண்டப வீதியில் நகரமன்ற உறுப்பினர் MK சாந்தலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் வார்டு சபா பலராமன் தங்கராஜ் மாலதி அச்சுதன் வட்ட செயலாளர் ஜெயச்சந்திரன் நகராட்சி அலுவலர்கள் சேகர் ஆகியோர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நகரமன்ற உறுப்பினர் வார்டின் இத்தனை மாத கால செயல்பாடுகள் சாதனைகள், எதிர்கால திட்டம் குறித்தும் வழிகாட்டுதல்கள் கோரி உரையாற்றினார்.
நிறைவேற்றபட்ட தீர்மானங்கள்:
1.தெருவிளக்குகள் வெளிச்சம் அதிகபடுத்த வேண்டும்.
2.சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டும்
3.ஆங்காங்கே வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்ற பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V.ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.