கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள இடுக்கி என்ற பகுதியில் கடந்த 7 ம் தேதி பயணிகளை ஏற்றி வந்த ஆட்டோ பள்ளிகானம் அருகில் சரிவான சாலையில் செல்லும் பொழுது கட்டுப்பாட்டை இழந்து எதிரே பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த ஜீப் உடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆறு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது விசாரணையில் ஒரு அதிர்ச்சி தகவல் காத்திருந்தது சட்டவிரோதமாக வாகனங்களை திருடி அதை உடைத்து சேஸ் நம்பர் மற்றும் நம்பர் பிளேட்டையும் மாற்றி புதிய வாகனமாக உருவாக்கி விற்பனை செய்து வந்தது அம்பலமாகி உள்ளது.
இந்நிலையில் பள்ளிகானம் கணில், தோப்பனங்குடி கனல் காந்த் மற்றும் மயிலப்பரம்பில் ஜேம்ஸ் ஜேக்கப் ஆகிய மூவரையும் இவ் வழக்கு தொடர்பாக கைது செய்துள்ளனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.