கர்நாடகா மாநிலம் ஹாசன் ஆலூரில் உள்ள வனப்பகுதியில் ஒரு காட்டு யானை உலா வந்தது இந்த யானைக்கு ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து பீமா என்ற பெயர் சூட்டி உள்ளனர் இந்த நிலையில் காட்டு யானைகள் ஒன்றோடு ஒன்று சண்டையிட்டுக் கொண்டதால் பீமாவுக்கு பெரும் காயம் ஏற்பட்டது இதனால் பீமாவுக்கு நடக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இதை அறிந்த வனத்துறையினர் பீமாவுக்கு சிகிச்சை அளிக்க தயார் நிலையில் இருந்தனர்.
இதை அடுத்து ஹள்ளியூரில் இருந்த பீமாவை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். யானையை சிகிச்சை அளிப்பதற்காக வனத்துறை ஊழியர் வெங்கடேஷ் மயக்க ஊசி செலுத்தினார் திடீரென ஆவேசமாக வனத்துறை ஊழியர் வெங்கடேசனை பலமாக காட்டு யானை தாக்கியது. இதில் பலத்த காயமடைந்த வெங்கடேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இந்த சம்பவம் கர்நாடகா வனத்துறையினர்களிடையே மிகவும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.