தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்ட மன்ற தொகுதியில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள அவர்களது உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் சுதந்திர போராட்ட தியாகிகளின் பங்கு மிக முக்கியமானது.குறிப்பாக சுதந்திர போராட்டத்தில் தென் மாவட்டங்களில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடியை சேர்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், மாமன்னன் சுந்தரலிங்கம், பாரதியார், வ.உ.சிதம்பரனார், வாஞ்சிநாதன், ஒண்டிவீரன் என பல்வேறு வீரர்கள் இன்று நாம் சுதந்திர காற்றை சுவாசிக்க பல்வேறு போராட்டங்களில் தியாகங்களையும் செய்தனர் .
அந்த வரிசையில் இந்திய வரலாற்றில் முதன் முதலில் வெள்ளையனே வெளியேறு என்று வீர முழக்கமிட்டவர் மாமன்னர் பூலித்தேவன் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருதப்படுகிறார். இவரது 308-வது பிறந்தநாள் செப்டம்பர் 1-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இந்த நிகழ்வில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல், பசும்பொன் தேசிய கழக தூத்துக்குடி மாவட்ட தலைவர் பரமசிவதேவர், பசும்பொன் தேசிய கழக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் சேதுபதி தேவர், பசும்பொன் தேசிய கழகத் தொண்டர் அணி மாவட்ட செயலாளர் பாலமுருகன், ஒன்றிய கழகச் செயலாளர் மாரி தேவ், மூவேந்தர் முன்னேற்றக் கழகத்துக்குடி மாவட்ட செயலாளர் ஐவர் ராஜா, விடுதலை சிறுத்தைகள் ரெஸ்லி,பரமசிவம் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி திமுக சமூகவலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண் குமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.