கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன இங்கு பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் செய்யும் வேலைக்கான சம்பளத்தை எஸ்டேட் நிர்வாகத்தினர் இவர்களது வங்கி கணக்குகளில் செலுத்தி விடுகின்றனர்.
அவ்வாறு செலுத்தப்படும் சம்பளத் தொகையை தொழிலாளர்கள் எடுப்பதில் தான் ஏகப்பட்ட சிரமங்கள் ஏற்படுவதாக தொழிலாளர் கூறுகின்றனர். சம்பளத் தொகையை எடுக்க ஏடிஎம்க்கு சென்றாள் அங்கு பணம் இல்லை என்று வருகிறது இதனால் பணம் எடுக்க காத்துக் கிடக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. இவ்வாறு காத்து கிடப்பதனால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொழிலாளர்களின் சம்பள நாட்களில் வால்பாறை பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் யூனியன் பேங்க் இந்தியன் பேங்க் ஆகிய ஏடிஎம் களில் கூட்டம் அதிகமாக உள்ளது இதனால் பணம் சீக்கிரம் தீர்ந்து விடுகிறது எனவே பணத்தை எடுக்க முடியாமல் தொழிலாளர்கள் சிரமப்படுகிறார்கள்.
பொருட்கள் வாங்க கடைகளுக்கு Gpay , pay tm மூலம் பணம் செலுத்தி விடலாம் ஆனால் எரிவாயு சிலிண்டர் வாங்கும் பொழுது இது போன்ற முறையில் பணம் செலுத்த முடியாமல் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர் எனவே இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே தொழிலாளர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-திவ்யகுமார், வால்பாறை.