கோவை மாவட்டம் வால்பாறையில் பொதுமக்களை வனவிலங்குகள் அச்சுறுத்தி வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், இதுகுறித்து வால்பாறை சிபிஐ தாலுகா செயலாளர் எஸ் மோகன் கூறுகையில் வால்பாறை அடுத்துள்ள வாட்டர் பால் எஸ்டேட் காவல் நிலையம் அருகிலுள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்குள் இரவு நேரங்களில் யானைகள் புகுந்து குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத் துவதாலும் குடியிருப்பு சுற்றிலும் நிற்பதாலும் இயற்கை உபாதை கழிப்பதற்கு கூட வெளியில் செல்ல முடியாமல் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றன.
மேலும் வீட்டை விட்டு வெளியே வருவதற்கும் பயப்படுகிறார்கள் இவர்கள் நலனை பாதுகாக்க வனவிலங்குகளை அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும். வனவிலங்குகள் அப்பகுதியில் முகாமிடும் போது வனத்துறையினர் பொது மக்களுக்கு பாதுகாப்பு அளித்திட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் இது தொடர்பாக வால்பாறை அருகே முடிஸ் குரூப்பில் கெஜ முடி எஸ்டேட் நிரந்தர தொழிலாளராக வேலை செய்பவர் கூறுகையில் நாங்கள் இருக்கும் பகுதியில் தற்பொழுது மழைக்காலம் என்பது பற்றி சிறிதும் கவலைப்படாமல் எஸ்டேட் நிர்வாகம் மாலை 5 மணிக்கு மேல் எக்ஸ்ட்ரா வேலைக்கு கொழுந்து பறிக்க வரச் சொல்கிறார்கள். இதுவும் சுமார் இரவு 7:30 மணி ஆகிறது இது தொடர்பாக களம் நடத்தினர் இடமும் எஸ்டேட் மேலிடத்திலும் கூற முடியவில்லை.
அவர்களுக்கு ஆதரவாக எஸ்டேட்டில் உள்ள சில தொழிற்சங்க தலைவர்கள் இருப்பதால் எங்களால் கேட்க முடியவில்லை. நாங்களும் இரவு நேரங்களில் வனவிலங்கு தொல்லையிலும் கடும் மழையிலும் எதிர்கால வாழ்வாதாரத்தை எங்கள் குழந்தைகளின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க வேற வழியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார்.
எங்களின் குறைகளை பொதுநலத்துடன் தங்களின் நாளை வரலாறு கேட்டதற்கு நன்றிகள் மேலும் நமது பத்திரிக்கை வாயிலாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாத்துக் கொடுங்கள் என்று அப்பாவித்தனமாக கூறினார்.
நாமும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கவனத்திற்கு நாளைய வரலாறு நாளிதழ் மூலம் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலைத் தோட்ட தொழிலாளர்களை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.
-P.பரமசிவம் வால்பாறை.