கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் கேரளாவில் உள்ள அனைத்து ரேஷன் கடை ஊழியர்கள் இணைந்து வரும் 11ம் தேதி ரேஷன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
ரேஷன் கடை ஊழியர்களுக்கும் பொருட்கள் வழங்குபவர்களுக்கும் சம்பள உயர்வுகள் வேண்டியும் ரேஷன் கடையில் இயங்கும் கருவிகள் பலமுறை பழுதாகி சரியாக பொருட்களை விநியோகிக்க முடியாத சூழ்நிலை இருப்பதால் அதை சரி செய்யவும் மற்றும் பல கோரிக்கைகளை உள்ளடக்கி கடைகள் அடைத்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
எனவே கேரளாவில் 11-ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-ஜான்சன், மூணார்.