கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் தீயணைப்பு நிலையம் பின்புறம் பொது மக்களின் பயன்பாட்டிற்காக அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் தொடங்கப்பட்டு பல வருடங்களாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றது.
இது எப்பொழுது மக்களின் பயன்பாட்டிற்கு வரும் என மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெயில் மற்றும் மழைக்காலங்களில் தவிக்கும் தங்களுக்கு இது போன்ற திட்டங்களால் தங்குவதற்கு ஒரு வீடு கிடைத்தால் மிகவும் நிம்மதியாக இருக்கலாம் என மக்கள் எதிர்பார்ப்பில் காத்து இருக்கின்றனர். கட்டுமான வேலை விரைவில் முடிந்து வசதியற்ற பொதுமக்களுக்கு வீடு கிடைத்தால் அனைவருக்கும் சந்தோசமே.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன், திவ்யகுமார்.