கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. வால்பாறை பகுதியை சுற்றிலும் உள்ள எஸ்டேட்டுகளில் இந்து முன்னணி மற்றும் பொது மக்களின் சார்பாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன வால்பாறையைச் சுற்றிலும் உள்ள எஸ்டேட்டுகளில் இருந்து 86 விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன அதுபோக பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தனித்தனியாக ஒரு அடி அளவு உள்ள விநாயகர் சிலை 108ம் வைத்திருந்தனர் இவை அனைத்தும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் வால்பாறை பகுதி பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு ஊர்வலத்தை சிறப்பாக நடத்தினர் மேலும் வால்பாறை பகுதி காவல்துறையினர் சிறப்பான முறையில் பாதுகாப்பு அளித்து விநாயகர் சிலை ஊர்வலம் நல்ல முறையில் நடைபெற வழிவகை செய்தனர். இந்த விநாயகர் சிலை ஊர்வலத்தால் வால்பாறை நகரமே திருவிழா கோலம் பூண்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை நிருபர்,
சி.ராஜேந்திரன்
மற்றும்
வால்பாறை பகுதி நிருபர்
திவ்யக்குமார்.