கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் அரசு கலைக் கல்லூரி இயங்கி வருகிறது இந்த கல்லூரியில் வால்பாறையை சுற்றியுள்ள எஸ்டேட் பகுதிகளில் இருக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் வால்பாறை பகுதியை சேர்ந்த அனைத்து தரப்பினரும் தங்கள் மகன்களையும் மகள்களையும் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கின்றனர்.
இந்த வருடம் கல்லூரி படிப்பை முடித்த மாணவ மாணவிகளுக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது இதில் 554 மாணவ மாணவிகள் பங்கேற்று தங்கள் பயின்ற துறையில் பட்டத்தை பெற்றுக் கொண்டனர். வால்பாறை அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் வெ.கலைச்செல்வி அவர்களும் மற்றும் ஆசிரிய பெருமக்களும் விழாவில் கலந்து கொண்டு பட்டங்களை வழங்கினார்கள். இந்த பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரியில் பயின்ற மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களும் வந்திருந்து சிறப்பித்தனர்.
இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து தரப்பினரும் கல்வியின் மகத்துவத்தை புரிந்து கொண்டு தங்கள் பிள்ளைகளையும் இதே போன்ற படிக்க வைத்து பட்டம் வாங்க செய்ய வேண்டும் என்ற ஒரு உந்துதல் அவர்களின் மனதில் உதயமாகும் என்பது உண்மையே. தங்களின் பிள்ளைகள் படித்து முடித்து பட்டத்தை வாங்கும் போது ஒவ்வொரு பெற்றோர்கள் கண்களிலும் ஆனந்த கண்ணீர் வருவதை பார்க்க முடிந்தது அவர்கள் ஒவ்வொருவரின் மனதிலும் நாம் தான் இவ்வளவு கஷ்டப்படுகிறோம் நம் பிள்ளைகளாவது நன்றாக இருக்கட்டும் என்ற எண்ணத்தில் ஆனந்த கண்ணீரோடு நிகழ்ச்சி பார்த்துக் கொண்டு இருந்தனர்.
தங்கள் வீடுகளில் சிறு பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர்களும் இந்த பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியை பார்த்த பின்பு தங்கள் குழந்தைகளையும் இது போன்று படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்கள் மனதில் தோன்றி இருக்கும் இதுவே இந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வெற்றி ஆகும். பட்டத்தை பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள் அனைவரும் தங்களது கல்லூரி முதல்வருக்கும் ஆசிரியர்களுக்கும் நன்றி சொல்லிவிட்டு வாழ்த்தி வணங்கி விடை பெற்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன், கோவை. திவ்யகுமார், வால்பாறை.