தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் காய்கறி மார்க்கெட் எம்ஜிஆர் சிலை அருகில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா 115 வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரை மாநாடு விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இந்த பொது கூட்டம் முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கோவில்பட்டி எம்எல்ஏ கடம்பூர் ராஜு சிறப்புரையாற்றும் பொழுது நாங்கள் எங்கள் ஆட்சியில் தொடங்கி வைத்த திட்டங்களுக்கு திமுக மூடுவிலா போடுகிறது. கூடிய சீக்கிரத்தில் மக்கள் திமுகவுக்கு மூடு விழா போடுவார்கள் என்றும் சனாதனத்தை பற்றி எங்களிடம் கேட்கிறீர்கள் முதலில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தாயார் துர்காஸ்டாலினிடம் இந்த கேள்வியை கேட்க முடியுமா என்றும் உங்க குடும்பத்தில் முதலில் சனாதனத்தை ஒழியுங்கள் என்றும் பேசினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏ சி. தா. செல்ல பாண்டியன், விளாத்திகுளம் முன்னாள் எம்எல்ஏ என்.கே.பெருமாள் ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ மோகன், மாவட்ட முன்னாள் பஞ்சாயத்து சேர்மன் சத்தியா, விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனிய சக்தி ராமச்சந்திரன், விளாத்திகுளம் முன்னாள் ஒன்றிய சேர்மன் வரதராஜ பெருமாள், ஒன்றிய செயலாளர்கள் மகேஷ், பால்ராஜ், தனவதி, தனஞ்செயன், காந்தி காமாட்சி, விளாத்திகுளம் நகர செயலாளர் மாரிமுத்து, புதூர் நகரச் செயலாளர் ஆண்டி, குட்லக் செல்வராஜ், வார்டு கவுன்சிலர் பிரியா மகளிர் அணி சாந்தி, குமாரத்தாய், ஆறுமுகத்தாய் தகவல் நுட்ப அணி ஆனந்த் உட்பட 400க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ராஜேஸ், விளாத்திகுளம்.