வேலூர் மற்றும் திருவண்ணா மலையில் 600க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது. வேலூர் மாவட்டத்தில் வேலூர் மற்றும் பேரணாம்பட்டு பகுதிகளில் பொது இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் நீர் நிலைகளில் கரைக்கும் பணி நேற்று நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதன்படி வேலூர் மாநகரின் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்த 500 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் கரைக்கப்பட்டன. வேலூர் சத்துவாச்சேரியில் நேற்று பிற்பகல் தொடங்கிய ஊர்வலம் சைதாப்பேட்டை முருகன் கோவில் மெயின் பஜார் மண்டித் தெரு தெற்கு காவல் நிலையம் கோட்டை சுற்றுச்சாலை சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக சதுப்பேரி ஏரிக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டது.
வேலூர் சத்துவாச்சேரியில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நிகழ்ச்சிக்கு இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் அரசுராஜா அவர்கள் தலைமையில் ஸ்ரீ நாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி அவர்கள் சிறப்பு பூஜை செய்தார் ஸ்ரீபுரம் இயக்குனர் சுரேஷ்பாபு ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் கோட்ட பொறியாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வல பாதையில் வேலூர் சரக டிஐஜி முத்துசாமி அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் மற்றும் காவல்துறையினர் ஊர்வலமாக சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் கொணவட்டம் பகுதியில் இருந்து மற்றொரு வினாயகர் சிலை ஊர்வலம் சதுப்பேரி ஏரிக்கு கொண்டு சென்று கரைக்கப்பட்டது.
முன்னதாக விநாயகர் சிலை ஊர்வல பாதையில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் காகிதப்பட்டறை பகுதியில் உள்ள டாஸ்மார்க் கடைகளும் மூடப்பட்டிருந்தன. மெயின் பஜார் பகுதியில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
பேரணாம்பட்டில் குடியாத்தம் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி அவர்கள் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பாதுகாப்பாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கரைக்கப்பட்டன.
திருவண்ணாமலை நகரில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டு தாமரைக் குளத்தில் கரைக்கப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு இந்து முன்னணி மாநில செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார் இதில் ஸ்ரீ கமலா பீடம் சீதா சீனுவாச ஸ்வாமிகள் மற்றும் இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.