அஇஅதிமுக என்பது தமிழ்நாடு மாநிலம் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள ஓர் இந்தியாவின் மூன்றவதாக பெரிய அரசியல் கட்சியாகும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து பிரிந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. இராமச்சந்திரன் அவர்கள் 17 அக்டோபர் 1972 அன்று மதுரையில் நிறுவப்பட்ட திராவிடக் கட்சி இது. சி. என். அண்ணாதுரையின் அடிப்படையிலான சமூக-ஜனநாயக மற்றும் சமூக நீதிக் கொள்கைகளை எம்.ஜி.ஆரால் அண்ணாயிசம் என்று கூட்டாக உருவாக்கியது. தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஏழு முறை பெரும்பான்மை பெற்று, மாநில வரலாற்றில் மிக வெற்றிகரமான அரசியல் கட்சியாக உருவெடுத்துள்ளது. இது தற்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
இந்த அஇஅதிமுக வின் 52 வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்களின் தலைமையில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகே அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா எம்ஜிஆர் புரட்சித் தலைவி அம்மா ஆகியோர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கழக நிர்வாகிகள் கொண்டாட்டினர் இந்நிகழ்வில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.