வேப்பலோடை அரசு பள்ளியில் ஆசிரியருக்கு அவரது கல்வி சேவையை பாராட்டி லட்சிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேப்பலோடை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணி புரிந்து வரும் ஆசிரியர் மாணிக்கராஜ் என்பவருக்கு அவரது கல்வி சேவையை பாராட்டி அம்பிகா கல்வி அறக்கட்டளை சார்பாக புதுக்கோட்டையில் நடந்த விழாவில் இலட்சிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. ஊரகத் திறனாய்வு தேர்வுகளில் மாணவர்கள் சாதனை படைக்கவும், படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டல் மூலம் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் அறக்கட்டளை மூலமாக உதவிகள் செய்து வருவதற்காகவும், இடைநின்ற மாணவர்களை பள்ளியில் திரும்ப சேர்த்து படிக்க வைத்து அவர்களின் பள்ளிப்படிப்பை நிறைவு செய்ததற்காகவும் இந்த விருது வழங்கப்படுகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. விருது பெற்ற ஆசிரியரை பள்ளி தலைமையாசிரியர் சேகர் வரவேற்றார். ஆசிரியர் கழக தலைவர் முனியசாமி பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமா சாந்தா மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் மாணவர்கள் வெகுவாக பாராட்டினர். இவ்வாசிரியர் 2023 ஆம் ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த ஆசிரியருக்கான விருதினை சுதந்திர தின விழா அன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர் பூங்கோதை