தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி எட்டையாபுரத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள் இன்று காலை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. எட்டையபுரம் பேரூராட்சி 15-வது வார்டில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.11-லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை ப்பினர் திருமிகு.G.V.மார்கண்டேயன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
மேலும் எட்டையபுரம் கோவில்பட்டி சாலையில் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை திறந்து வைக்கப்பட்டது. பின்னர் தேர்வுநிலை பேரூராட்சி அலுவலகம் எட்டையபுரம் பேரூராட்சியில், பொது நிதியின் கீழ் ரூ.30-லட்சம் மதிப்பீட்டில் புதிய கூட்ட அரங்கு கட்டிடத்தினை உறுப்பினர் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது
எட்டையபுரம் பேரூராட்சி 2,6,11,12,13-வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஒரு கோடியே 80-லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணிகள் மற்றும் எட்டையபுரம் பேரூராட்சி 2,3,6,11-வது வார்டு மக்கள் பயன்பெறும் வகையில் 15-வது நிதிக்குழுமானிய திட்டத்தின் கீழ் ரூ.15-லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றன.
இந்த வளர்ச்சி பணியில் நிகழ்வின் போது கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் நவநீதகண்ணன் புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் எட்டையபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் எட்டையபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் பேரூர் கழகச் செயலாளர் பாரதிகணேசன் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் கதிர்வேல் மாவட்ட பிரதிநிதி கல்லடிவீரன் பாரதியார் நூற்பாலை முன்னாள் சேர்மன் ஆழ்வார் உதயகுமார் தூத்துக்குடி வடக்கு மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் M.R.முனியசாமி வார்டு உறுப்பினர் தங்கம்மாள்,மைக்கேல்ராஜ், ராமர்,மணிகண்டன் வார்டு செயலாளர்கள் மகேஷ்,சின்னப்பர்,பட்சிராஜன் அருள்சுந்தர் பேரூர் கழக துணைச் செயலாளர்கள் மாரியப்பன், முத்துமுனியசாமி தலைமை கழக பேச்சாளர்கள், தமிழ்பிரியன்,ஆனந்த் மகளிர் அணி மஞ்சமாதா தேவி கழக உறுப்பினர் மாரிமுத்துபாண்டியன் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் உட்பட கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.