முதலில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்டு அனைவரும் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.
இன்று காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள ஊராட்சிகளின் சார்பில், கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு அரசு உத்திரபட்டி இருந்தது அதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஓட்டப்பிடாரம் கிராம பஞ்சாயத்து உட்பட்ட மீனாட்சிபுரத்தில் ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா அவர்கள் தலைமையில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், திட்டப்பணிகள் குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது.
மேலும் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரக பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை, டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது .
இதில், ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் 200க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.