தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கமலாபுரம் கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இயக்குனர் மருத்துவர் சஞ்சீவிராஜ் அவர்களின் அறிவுரையின் பேரில், உதவி இயக்குநர் மருத்துவர் இரா. விஜய் ஸ்ரீ தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர்கள் விளாத்திகுளம் கால்நடை மருத்துவர் சி. கிருஷ்ணமூர்த்தி மருத்துவர் சி. வான்மதி மற்றும் கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜெயராம் ஆகியோர் இணைந்து சுமார் 1000-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டனர்.
இம்முகாமில் கிடாரி கன்றுகளை சிறப்பாக வளர்த்து பராமரிப்பவர்களுக்கு பரிசு பொருள்களும், மேலாண்மை விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.மேலும் இம்முகாம் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்ததாக பங்கேற்ற பொதுமக்கள் பாராட்டினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
விளாத்திகுளம் நிருபர்,
-பூங்கோதை.