கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் கிராமத்துக்குள் நேற்று இரவு 6 காட்டு யானைகள் நுழைந்ததை அடுத்து, வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக வனச்சரகர் சவுந்தர்யா தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பச்சாப்பாளையம்- கரடிமடை இடையே ஊருக்குள் புகுந்திருந்த யானைகளை காட்டிற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வனத்துறையினரின் வாகனம் சிறிய பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. உடனடியாக ஜே. சி. பி. வாகனம் வரவழைக்கப்பட்டு, பள்ளத்தில் விழுந்த வனத்துறை வாகனம் மீட்கப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.