தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குச் சாலையில் இருந்து கக்கரம்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் பச்சைராஜ் வயது 35 தகப்பனார் பெயர் சங்கிலி கருப்பசாமி கிழக்கு தெரு கக்கரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இவர் கக்கரம்பட்டி விளக்கு அருகே வரும்பொழுது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்த தகவலை அறிந்த ஓட்டப்பிடாரம் காவல்துறையினர் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் அவர் சுய நினைவின்றி இருந்த அவரை மதுரை வேலம்மாள் மருத்துவமனை அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனால் அவரது மூளை செயல் இழந்து விட்ட நிலையில் மீண்டும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டார் சிகிச்சையில் இருந்த இவர் இன்று காலை 10 அளவில் இறந்து விட்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்கு ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.