கோவை ஒப்பணக்கார வீதி மற்றும் மேட்டுப்பாளையம் சாலையில் தனிஷ்க் ஜுவல்லரி திறப்பு விழா நடைபெற்றது.இரண்டு கிளைகளை டைட்டன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் திறந்து வைத்தார். அதில் சிறப்பு விருந்தினராக தென்னிந்திய மண்டலத்தின் தலைமை அதிகாரி சரத் மற்றும் தென்னிந்திய மண்டலத்தின் மேலாளர் நரசிம்மன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இரண்டு கிளைகளின் உரிமையாளர் அசோக் மற்றும் செல்வம் உடன் இருந்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தென்னிந்திய மண்டலத்தின் தலைமை அதிகாரி சரத் தமிழ்நாட்டில் மொத்தம் 55 தனிஷ்க் கிளைகள் இருப்பதாகவும் அதில் கோவை மாவட்டத்தில் 4 கிளைகள் இருப்பதாக தெரிவித்தார். டாட்டா மற்றும் டைட்டன் நிறுவனத்தின் குழுவை சேர்ந்தது தான் தனிஷ்க் நிறுவனம் என்றும் புதிய வரவுகளாக தரோஹர் & காக்கத்தியா தங்க நகை கலெக்ஷன்களை அறிமுகம் செய்து உள்ளதாக கூறினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குறிப்பாக திருமண கலெக்ஷன் மற்றும் கலர் கற்கள் கொண்ட நகைகள் என ஒவ்வொரு கிளைகளிலும் சுமார் 4000-க்கும் மேற்பட்ட டிசைன்கள் இருப்பதாக தெரிவித்தார்.கோவையில் புதிதாக திறக்கப்பட்ட இரண்டு கிளைகளிலும் நகை வாங்குபவர்களுக்கு நகை,வைரம் மதிப்பிற்கு ஏற்ப தங்க நாணயங்கள் இலவசமாக வழங்கப்படும் என்று கூறினார்.தங்க நகைகளில் தயாரிப்புக்கு ஏற்றது போல சலுகைகள் வழங்க இருப்பதாகவும் அனைத்து நகைகளுக்கும் எக்ஸ்சேஞ்ச் செய்ய இருப்பதாக கூறினார்.தங்க நகை சேமிப்பு திட்டத்தில் சேருபவர்களுக்கு 10 முதல் 15 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.பொதுவாக அனைத்து நோய்களுக்கும் செய்கூலி சேதாரம் உண்டு ஆனால் சேமிப்பு திட்டத்தின் கீழ் நகை வாங்கினால் அதற்கு சிறப்பு சலுகை இருப்பதாக கூறினார்.தனிஷ்க் நிறுவனத்திற்கு 10,000-க்கு மேற்பட்டோர் கைவினை மூலமாக தங்க நகைகளை செய்து வருகின்றனர்.
பேட்டி : சரத் ( டைட்டன்
தென்னிந்திய மண்டலத்தின் தலைமை அதிகாரி )
-சீனி, போத்தனூர்.