கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் வால்பாறை சுற்றிலும் உள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா தளங்களை கண்டு மகிழ்ந்து செல்கின்றனர். காவல்துறையினர் மற்றும் வனத்துணையினர் சுற்றுலாத் தலங்களில் ஆங்காங்கே அறிவிப்பு பலகைகள் வைத்து சுற்றுலாப் பயணிகளை நெறிப்படுத்தி வருகின்றனர் ஆனால் ஒரு சில சுற்றுலாப் பயணிகள் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் கொடுக்கும் அறிவிப்புகளை மதிக்காமல் உள்ளனர்.
மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் இடையில் நிறுத்தி வன விலங்குகளுக்கு உணவு கொடுப்பது மற்றும் செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். வனத்துறையினர் இடையில் வாகனங்களை நிறுத்தி வனவிலங்குகளுக்கு உணவு அளிக்காதீர்கள் மற்றும் புகைப்படம் எடுக்காதீர்கள் என்று எவ்வளவோ அறிவிப்புகளை வைத்திருந்தாலும் அதை சுற்றுலாப் பயணிகள் சிலர் கேட்பதாக இல்லை.
மேலும் சுற்றுலா தலங்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் ஆறுகள் போன்றவற்றில் இறங்கி குளிக்க கூடாது என்று அறிவிப்பு பலகைகள் வைத்திருந்தாலும் தடையை மீறி சில சுற்றுலாப் பயணிகள் அவற்றில் இறங்கி ஆபத்தை உணராமல் குளிக்கின்றனர் இதனால் சில சமயங்களில் விபரீதம் ஏற்படுகிறது.
வால்பாறை பகுதியில் கூலங்கள் ஆறு,சோலையார் தனல், சோலையார் பால்ஸ்,கருமலை பால்ஸ், கருமலை மாதா கோயில் பகுதி, பச்சைமலை எஸ்டேட் பகுதி, நடுமலை ஆற்று ஓரம் மற்றும் இஞ்சி பாறை தனல் பகுதி வெள்ளமலை தனல் மற்றும் ஆற்றுப்பகுதி இது போன்ற பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் சுற்றுலா செல்லும் இடங்களில் உள்ள நீர் நிலைகளில் நீர் இருக்கும் பகுதி சேற்று பகுதி கற்கள் நிறைந்த பகுதி எது என்று சுற்றுலா செல்பவர்களுக்கு தெரியாது எனவே அறிவிப்பு பலகை மற்றும் எச்சரிக்கை பதிவுகளுக்கு மதிப்பு கொடுத்து அதற்கு தகுந்தால் போல் நாம் செயல்பட்டால் விபத்தில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள முடியும்.
கடந்த சில நாட்களுக்கு முன் ஆற்றில் குளித்த ஐந்து பேர் ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் நம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியது இது போன்று மற்றும் ஒரு சம்பவம் நடக்காத வகையில் தடைகளை மீறி செயல்படுபவர்கள் மீது கடுமையான தண்டனையோ அல்லது அபராதமோ விதித்தால் மட்டுமே இது போன்று தடையை மீறுபவர்களை தடுக்க முடியும் எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன், திவ்யகுமார்.