தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில், மாநில அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டிகள் நடைபெற்றது. இதில், காமராஜ் கல்லூரி முதல்வர் பூங்கொடி தலைமை வகித்தார். தமிழ்த்துறை பேராசிரியர் கருப்பசாமி வரவேற்றார்.
மாவட்ட பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவரும், உமரிக்காடு பஞ்சாயத்து தலைவருமான டாக்டர்.எஸ். ராஜேஷ் குமார் திருவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் 20க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிக்கான ஏற்பாடுகளை பிபிஏ துறை மாணவர் அமைப்பு தலைவர் குமரன், செயலாளர் ஷிவானி மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.