தூத்துக்குடி மாவட்டம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாலை சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக சொன்ன தேர்தல் அறிக்கை 313 நிறைவேற்ற கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் முன்னெடுத்து வருகிறார்கள் அடுத்த கட்டமாக சாலை மறியல் அரசு எங்கள் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றால் ஒட்டுமொத்த ஊழியர்களும் அரசுக்கு எதிராக ஓட்டளிக்க முடிவு செய்துள்ளோம்.
எம்ஜிஆர் காலத்தில் தொடங்கப்பட்ட சத்துணவு திட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் விதவைகள் ஊனமுற்றவர்கள் பணியாற்றி சில பேர் ஓய்வு பெற்றுள்ளார்கள் அரசு தரும் 2000 ரூபாய் வைத்து இன்றைய காலகட்டத்தில் உள்ள விலைவாசிக்கு மருந்து வாங்க கூட இந்த வயதான காலத்தில் முடியவில்லை எங்களுக்கு மகளிர்மை தொகை ஆயிரம் ரூபாயும் இந்த அரசு வழங்கவில்லை நாங்கள் வெறும் 2000 ரூபா தான் பென்ஷன் வாங்குகிறோம்.
இப்படியே போனால் தெருவில் இறங்கி தேர்தல் பிரச்சாரத்தில் அரசு எதிராக ஈடுபடுவோம் என ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் அந்தோணியம்மாள் இணை செயலாளர் தலைமை தாங்கினார் ஜெயந்திமாலா வட்டார நிர்வாகி முன்னிலை வகித்தனர் மற்றும் வெனிற்றாள் மரியதெரசாள் ஜாஸ்மின் செந்தூரப் பாண்டியன் மற்றும் வள்ளியம்மாள் ஓட்டப்பிடாரம் செயலாளர் வாழ்த்துரை வழங்கினார் மாசாணமுத்து வட்டார நிர்வாகி, ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நிறைவுரை வெனிற்றாள் மங்கரனாஸ் செயலாளர் நன்றியுரை வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.