தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பண்டாரம்பட்டியில் இன்று(09.10.2023) கால்நடை பராமரிப்புத்துறையின் சார்பில் நடைபெற்ற சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.கி.செந்தில்ராஜ்,இ.ஆ.ப., அவர்கள்தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் சிறந்த கால்நடை பராமரிப்போருக்கான மேலாண்மை விருதுகள் 3 நபர்களுக்கும் மற்றும் சிறந்த கிடேரி கன்றுகள் வளர்த்தோர்களுக்கான பரிசுகள் 3 நபர்களும் வழங்கி பாராட்டினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த விழாவில் மண்டல இணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) திரு.எஸ். சஞ்சீவிராஜ், துணை இயக்குநர் (கால்நடை பராமரிப்பு) திரு.ராதாகிருஷ்ணன், உதவி இயக்குநர்கள் (கால்நடை பராமரிப்பு) திரு.சங்கரநாராயணன், திரு.ஜான் சுபாஷ், கால்நடை வளர்ப்போர்கள், விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
பூங்கோதை.