பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில்- என்.ஜி.எம் கல்லூரி NCC மாணவர்கள் இணைந்து, நேற்று தேசிய ரத்த தானத்தை முன்னிட்டு அக்டோபர் 1ஆம் தேதி அரசு மருத்துவமனை கடைவீதி பேருந்து நிலையம் ,தேர்வு நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியில் உள்ள கடைகளில் துண்டு பிரசுரங்கள் உபயோகம் செய்து இளைஞர்களிடத்திலும் பொதுமக்களிடத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்ட இளைஞர்களிடத்தில் ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மூன்று மாதத்துக்கு ஒரு முறை அல்லது ஆறு மாதத்துக்கு ஒரு முறை 18 வயது முதல் 45 வயது வரை உள்ள அனைவரும் ரத்த தானம் செய்யலாம் என்பதை வலியுறுத்துகின்ற வகையில் பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பாகவும், என் ஜி எம் கல்லூரி என்சிசி மாணவர்களோடு இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்படுத்தப்பட்டது.
ஒவ்வொரு இரண்டு விநாடிகளுக்கு ஒருமுறையும் ஒருவருக்கு இரத்த மாற்றத்திற்காக இரத்தம் தேவைப்படுகிறது. மேலும் ஒருவர் ரத்த தானம் செய்வதன் மூலம் அவர் மூன்று உயிர்களை காப்பாற்ற முடியும். மேலும் வருடத்திற்கு ஆறு முறை வரை இரத்த தானம் செய்வது பாதுக்காப்பானது என பொதுமக்களுக்கு எடுத்துறைக்கப்பட்டது.
இரத்த தானத்தின் நன்மைகள்:
• நன்கொடையாளரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
இரத்த தானம் செய்வதில் பலர் பயப்படுகிறார்கள். ரத்த தானம் செய்தால் பலவீனமாகிவிடும் என்று நினைக்கிறார்கள். மாறாக, இரத்த தானம் நன்கொடையாளருக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது மற்றவர்களின் உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், நன்கொடையாளரின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
• இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது:
நீங்கள் இரத்த தானம் செய்யும்போது உங்கள் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக, இரத்த தானம் இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்தின் அளவைக் குறைக்க உதவுவதால் ஆண்களுக்கு அதிகப் பலன் கிடைக்கும். (ஆண்களுக்கு மட்டும் ஏன் என்று நீங்கள் யோசித்தால், மாதவிடாய் சுழற்சியின் போது பெண்கள் இரத்தத்தை இழப்பதால் தான்). இரும்புச் சத்து அதிகரிப்பது பல இதய நோய்களுக்கு வழிவகுக்கும், ஆனால் இரத்த தானம் செய்வதன் மூலம் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளை முறையே 88% மற்றும் 33% வரை குறைக்கலாம்.
• உடற்தகுதியை மேம்படுத்துகிறது:
பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் இரத்த தானம் செய்வது உங்கள் உடற்தகுதியை மேம்படுத்துகிறது, ஏனெனில் ஒவ்வொரு பைண்ட் இரத்தமும் (450 மில்லி) நன்கொடையாளரின் உடலில் 650 கலோரிகளை எரிக்கிறது.
• புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கிறது:
மில்லர்-கீஸ்டோன் இரத்த மையத்தின்படி, சீரான இரத்த தானம் புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
• நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்துகிறது:
இரத்த தானம் செய்த பிறகு உங்கள் மண்ணீரல் புத்துயிர் பெறுவதால், இரத்த தானம் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ் தலைமையில்,என் ஜி எம் கல்லூரி பேராசிரியர் சித்திரைச் செல்வன் அவர்கள் முன்னிலையில் நேதாஜி இளைஞர் பேரவை நிர்வாகிகள் என் ஜி எம் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பல்வேறு இடங்களில் ரத்த தான தேவை குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.