தமிழ்நாடு மாநில அளவிலான 17 வது ஜூனியர் ஆண் பெண் கிளித்தட்டு போட்டிகள் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி சந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 18 மாவட்ட ஆண் பெண் வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள் நடந்து முடிந்த இந்த போட்டியில் ஈரோடு மாவட்ட ஆண்கள் பிரிவில் ஈரோடு மாவட்டம் முதலிடம் திருவள்ளூர் மாவட்டம் இரண்டாம் இடம் செங்கல்பட்டு மாவட்டம் மூன்றாமிடம் மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நான்காம் இடத்தை பெற்றார்கள் பெண்கள் பிரிவில் முதலிடம் ஈரோடு மாவட்டமும் இரண்டாம் இடம் தேனி மாவட்டமும் மூன்றாமிடம் திருவள்ளூர் மாவட்டமும் நான்காம் இடம் செங்கல்பட்டு மாவட்ட அணியினரும் பெற்றுள்ளார்கள் இந்த போட்டியினை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு மோகன் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்.
இந்த போட்டிக்கு தமிழ்நாடு அட்யா பட்யா கழகத்தின் பொதுச்செயலாளர் திரு சிவசுப்பிரமணியன் அவர்கள் தலைமை வகித்தார்கள், தூத்துக்குடி மாவட்ட சங்க செயலாளர் திரு மனோ மற்றும் தலைவர் திரு முருகேசன், சந்திரா மெட்ரிக் பள்ளி நிர்வாகிகள் ஜானகிராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின நிறுவனர் – முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு மோகன் அவர்கள் வாழ்த்துரை வழங்கி போட்டியினை தொடங்கி வைத்தார்கள்.
பரிசளிப்பு விழாவில் தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர் திரு மனோ திரு வேல்முருகன் திரு முருகேசன் திரு சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வைத்தார்கள். பள்ளி நிர்வாகிகள் திரு ஜானகிராமன் திரு கார்த்திகேயன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாநில பொதுச் செயலாளர் திரு சிவசுப்பிரமணியன் தலைமையில் சிறப்பு விருந்தினர் ஜானகிராமன் கார்த்திகேயன் சுப்பிரமணி ஆகியோர் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசினை வழங்கினார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
ஆண்கள் பிரிவில் ஈரோடு மாவட்டம் முதலிடம், திருவள்ளூர் மாவட்டம் இரண்டாம் இடம், செங்கல்பட்டு மாவட்டம் மூன்றாமிடம், மற்றும் திருநெல்வேலி மாவட்டம் நான்காம் இடத்தை பெற்றார்கள். பெண்கள் பிரிவில் முதலிடம் ஈரோடு மாவட்டமும், இரண்டாம் இடம் தேனி மாவட்டமும், மூன்றாமிடம் திருவள்ளூர் மாவட்டமும், நான்காம் இடம் செங்கல்பட்டு மாவட்ட அணியினரும் பெற்றுள்ளார்கள் நிறைவில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் திரு மனோ அவர்கள் நன்றி கூறினார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.