கோவை மதுக்கரை பகுதியில் உள்ள பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளியில், 9வது ஆண்டு முதுநிலை வகுப்பு மாணவர்களுக்கான 2023ம் ஆண்டின் விளையாட்டு விழாவின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கோவை மதுக்கரை பகுதியில் பிருந்தாவன் வித்யாலயா பப்ளிக் பள்ளி செயல்பட்டு வருகிறது, இப்பள்ளியின், 9ம் ஆண்டு முதுநிலை மாணவர்களுக்கான விளையாட்டு விழா துவக்க நிகழ்ச்சி இன்று பள்ளி மைதானத்தில் நடைபெற்றது, இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய கால்பந்து அணியின் விளையாட்டு வீரர் பிரதீப் மோகன் ராஜ், கலந்து கொண்டு இப்போட்டிகளை துவக்கி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் கிரிக்கெட் போட்டிக்கு அளிக்கும் முக்கியத்துவம் கால்பந்துக்கு இல்லை, இதற்க்கு முக்கிய காரணம் இந்தியாவில் பெருவாரியான இடங்களில் கால்பந்து மைதானங்கள் இல்லை, இவற்றை உருவாக்க வேண்டும், இளம் தலைமுறை மாணவர்களுக்கு விளையாட்டு துறையில் ஆர்வம் உள்ளது ஆனால், அவர்களுக்கான முறையான பயிற்சிகளும், பயிற்சி கூடங்களும் இல்லை, இவற்றை நிவர்த்தி செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும் என்றார், இதனை தொடர்த்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மாணவர்களின் அணிவகுப்பு நடைபெற்று, தேசிய கொடி, விளையாட்டு கொடி, ஒலிம்பிக் கொடிகள் ஏற்றப்பட்டு சமாதானத்தின் அடையாளமாக, புறாக்களும் கலர் பலூன்களும், பறக்க விட பட்டது, இந்த நிகழ்வில் பள்ளியின் தாளாளர் வசந்தராஜன், பள்ளியின் முதல்வர் வனிதா திருமூர்த்தி, துணை முதல்வர் முத்துமாரி, உடற்கல்வி இணை இயக்குநர் அன்பானந்தம், ஆகியோர் முன்னிலையில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
-சீனி, போத்தனூர்.