கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாறு பகுதிகள் எப்பொழுதும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக இருந்து வருவது வழக்கம். ஆனால் தொடர் விடுமுறைகளிலும் விழா காலங்களிலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால் எல்லா சாலைகளிலும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றன . இதனால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளும் மற்றும் உள்ளூர் வாசிகளும் பெரிதே பாதிக்கப்படுகின்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குறைந்தபட்சம் இரண்டு மூன்று மணி நேரங்கள் ஒரு இடத்தில் இருந்து வாகனத்தில் செல்ல தாமதமாகிறது. சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை முன்னிட்டு நான்கு நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சுற்றுலா பயணம் எண்ணிக்கை அதிகரித்து மூணார் நகரமே வாகன நெர்சலில் ஸ்தம்பித்தது.மூணார் பகுதியில் இடம் குறைவாக உள்ளதால் இந்த வாகன நெரிசலை குறைப்பதற்கான வாய்ப்புகளையும் மற்றும் வழிமுறைகளையும் கேரள அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என அனைத்து தரப்பினரிலிருந்தும் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஜான்சன்
மூணார்.