கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் சுற்றுலா தளமான மூணாவது பகுதியில் இயங்க வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது இதற்கு காரணம் அந்த கல்லூரியில் 2018 ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவிகுளம் சாலையில் இயங்கி வந்த அரசு கல்லூரி கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இதையடுத்து எம்.ஜி. காலனி அருகே உள்ள பட்ஜெட் ஓட்டல் மற்றும் பொறியியல் கல்லூரியின் ஒர்க்ஸ் ஷாப் கட்டிடத்தில் கல்லூரி செயல்பட்டு வருகிறது.இங்கு வருடந்தோறும் தேயிலை தோட்டத் தொழிலாளர்களை சார்ந்த பல மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இக்கல்லூரியில், கட்டடங்கள் இடிந்து, அடிப்படை வசதிகள், விடுதிகள், பயண வசதிகள் இல்லாததால்,
ஆண்டுதோறும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. தற்போது 220 மாணவர்கள் மட்டுமே 4 இளங்கலை பாடப்பிரிவுகள் படித்து வருகின்றனர்.606 குழந்தைகள் முதுகலை படிப்புகளுடன் கல்லூரியில் படிக்கும் வசதி இருந்தது. புதிய கட்டிடங்கள் மற்றும் வசதிகள் ஏற்படுத்தாத காரணத்தினால் பகுதி மக்கள் தங்களுடைய மேற்படிப்பிற்காக பல மாவட்டங்கள் மற்றும் பல மாநிலங்களு க்கும் சென்று கல்வி பயிலும் அவளும் ஏற்பட்டுள்ளது. எனவே கேரளா அரசும் கேரள கல்வித்துறை அதிகாரிகளும் உடனடியாக இதனை போர் கால அடிப்படையில் புதிய கட்டடங்களை கட்டவும் மாணவர்களின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தவும் மற்றும் அப்பகுதியில் வாழும் மக்களின் புதிய சமுதாயத்தினை கல்வி கற்றவர்களாக மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன் மூணார்.