கோவை: ரெக்ஸ் ஆர்த்தோ ஹாஸ்பிட்டலின் தேசிய அளவிலான நவீன மருத்துவத்துறையில் ரோபோட்டிக் மூலம் முழங்கால்மூட்டு மற்றும் இடுப்புமூட்டு மாற்று அறுவை சிகிச்சையின் பயன்களையும் நுணுக்கங்கள் குறித்த தேசிய அளவிலான மாநாடு கோவை அவினாசி சாலையில் உள்ள ஹோட்டல் ரெசிடென்சி ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.
கோவை பூமார்க்கெட் பகுதியில் உள்ள ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை சார்பாக ஆறாவது ஆண்டாக நடைபெற்ற இதில் நவீன கால மருத்துவத்தில் ரோபோடிக் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை முறை பற்றி மற்ற மருத்துவமனைகளுக்கு கற்றுக்கொடுக்கவும் வரும் காலத்தில் ரோபோட்டிக் மூட்டுமாற்று அறுவை சிகிச்சை எப்படி தரமான சிகிச்சையை நோயாளிகளுக்கு வழங்கும் என்பது பற்றியும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் கலந்து கொண்டு பேசினர்.முன்னதாக நடைபெற்ற மாநாடு துவக்க விழா ரெக்ஸ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் ரெக்ஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் மல்லிகா சந்திரபோஸ் குத்துவிளக்கேற்றினார்.சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு எலும்பியல் சங்கத்தின் முன்னால் தலைவர் மருத்துவர்கள் வனசேகர்,துணை தலைவர் மணிகண்டன்,செயலாளர் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர்.மாநாட்டில் தமிழ்நாடு,பாண்டிச்சேரி,கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் எலும்பியல் துறை தொடர்பான மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் ஆர்த்ரைட்டிஸ் எனப்படும் முடக்குவாதத்தால் முழங்கால் மற்றும் இடுப்பு மூட்டு அறுவை சிகிச்சையில், சாதாரண முறையில் செய்யும் மூட்டுமாற்று அறுவை சிகிச்சையை விட நவீன ரோபோடிக் முறையின் பயன்கள் குறித்தும் இளம் மருத்துவர்கள் இந்த சிகிச்சை முறை குறித்து தெரிந்து கொள்வதன் அவசியம் குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-சீனி, போத்தனூர்.