தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டாரம் வேளாண்மை துறை அட்மா திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான விவசாயிகள் பயிற்சி சிறு தானிய சாகுபடி குறித்து வாலசமுத்திரம் கிராமத்தில் நடை பெற்றது.
இப்பயிற்சி யை வேளாண்மை உதவி இயக்குனர் அலாய் பெர்னாண்டோ அவர்கள் தலைமை தாங்கினார் இதில் கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலைய உழவியல் பேராசிரியர் திரு குரு அவர்கள் சிறு தானிய சாகுபடி குறித்து தொழில்நுட்ப உரையாற்றினார் பின்னர் உதவி வேளாண்மை அலுவலர் வேளாண் மையத்தில் வழங்கப்படும் மானிய திட்டங்களை எடுத்துரைத்தார், உதவி தொழில்நுட்ப மேலாளர் திரு செல்வகுமார் உழவன் செயலி பற்றி விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.
மேலும் இதில் அட்மா வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுபத்ரா மற்றும் உதவி தொழில்நுட் மேலாளர் மங்கையர்கரசி கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.