கோவை மாவட்டம் வால்பாறைக்கு கிணத்துக்கிடவு எஸ்.என்.எம்.வி கல்லூரி மாணவர்கள் 10 பேர் வால்பாறை பகுதியை சுற்றி பார்ப்பதற்காக இரு சக்கர வாகனத்தில் சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் வால்பாறை சோலையார் அருகே உள்ள ஆற்றில் குளிக்கும் போது ஆழமான பகுதிக்கு சென்றதால் தனுஷ், அஜய், வினை , சரத், நபில் அரசர் ஆகியோர் நீர்மூழ்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.
இது தொடர்பாக இப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் கூறுகையில் நகராட்சி துறையோ பொதுப்பணி துறையோ சுற்றுலா தளம் மூலமாகவோ இப்பகுதியில் அறிவிப்பு போடு வைக்கவில்லை மேலும் இதற்கு முன்பு சுமார் இரண்டு மூன்று தடவை உயிரிழப்பும் ஏற்பட்டிருக்கிறது.
இதேபோல் கூழாங்கல் ஆற்றில் தொடர்ந்து உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளது ஆனால் அப்பொழுது பல்வேறு பிரச்சனைகளுக்கு இடையே வால்பாறை நகராட்சி மூலம் சூழல் அடைக்கப்பட்டது ஆனால் இப்பொழுது அங்கு உயிரிழப்பு ஏற்படுவதில்லை அதே மாதிரி இப்பகுதியில் செய்து தர வேண்டும் மேலும் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.
செய்தியாளர் வால்பாறை,
-P.பரமசிவம்.