வால்பாறையில் கடந்த ஒருவார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதில் கடந்த மூன்று நாள்களாக இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆறுகளில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளின் நீா்மட்டம் உயா்ந்து வருகிறது.
இதனிடையே, கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழைக்கு அண்ணா நகா் பகுதியில் தடுப்புச்சுவா் இடிந்து விழுந்ததில் கனகராஜ் மற்றும் ஆறுமுகம் ஆகியோரின் வீட்டின் மேற்கூரை சேதமடைந்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீட்டில் இருந்தவா்கள் வேறு வீட்டுக்கு சென்று தங்கியதால் உயிா் தப்பினா். இதேபோல எஸ்டேட் பகுதிகளில் பல இடங்களில் சிறிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.