தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி புதியம்புத்தூரில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நேற்று ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் மோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது..
இந்த பூத்து கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விழாவிற்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு அவர்கள் மற்றும் அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் காஞ்சி பன்னீர்செல்வம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் கலந்து கொண்டனர்.
வரும் மக்களவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக சாா்பில் ஒட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதியில் பகுதிகளில் உள்ள இளைஞா் மற்றும் இளம்பெண்கள் பாசறை, மகளிா் அணி, தகவல் தொழில்நுட்பக் அணி ஆகியவை சாா்பில் பூத் கமிட்டி அமைக்கும் பணி 19 பேர் கொண்ட ஒரு பூத் கமிட்டி அமைக்கப்படுகிறது. அதில், இளைஞர், இளம்பெண் பாசறை மற்றும் மகளிரணியைச் சேர்ந்த தலா 5 பேர், தகவல் தொழில்நுட்ப அணியைச் சேர்ந்த 2 பேர் கட்டாயம் இடம்பெற வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பூத் கமிட்டி உறுப்பினராக இருக்க வேண்டும். ஏற்கெனவே உள்ள நிர்வாகிகள் பூத் கமிட்டியில் இடம்பெறக்கூடாது.
இந்த விழாவில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் ஒன்றிய கவுன்சிலர் கோபி என்று அழகிரி, கோவில்பட்டி நகர மன்ற உறுப்பினர் வடக்கு மாவட்ட இளம் பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் கவியரசர் அவர்கள், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தினேஷ் குமார், அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் MS கண்ணன் அவர்கள் மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் SR சின்னதுரை அவர்கள், அய்யப்பன் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் புதியம்புத்தூர் நகர செயலாளர் ஆறுமுகச்சாமி தகவல் தொழில்நுட்ப பிரிவு பொருளாளர் ஆறுமுச்சாமி அவர்கள் மற்றும் நிர்வாகிகள் பூத் கமிட்டி முகவர்கள் மூத்த தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஓட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.