தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சின்னூர் விடியல் ட்ரெஸ்டின் 25 ஆவது ஆண்டு வெள்ளி விழாவை முன்னிட்டு சூரிய கூடார உலர்த்தி திறப்பு விழா நடைபெற்றது.
நபார்டு வங்கியின் நிதி உதவியிர் சின்னூர் நீர் வடிப் பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மிளகாய் வத்தல் மற்றும் எதிர வேளாண் விலை பொருள்களை நவீன தொழில்நுட்ப முறையில் உலர்த்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் சுமார் 400 சதுர அடி பரப்பளவு கொண்ட ரூபாய் 3.5 லட்சம் மதிப்பிலான சூரிய கூடார வளர்ச்சி நீர்வாடிப் பகுதி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக கட்டமைக்கப்பட்டிருந்தது.
நாபார்டு வங்கியின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதன்மை பொது மேலாளர் சங்கர் நாராயணன் சூரிய கூடார உளர்த்தியை பொதுமக்கள் பண்பு பாராட்டிற்காக திறந்து வைத்து சிறப்புரையாற்றினார் அப்போது அவர் கூறியதாவது 1996 ஆம் ஆண்டுகளில் முதல் முதலாக கிராமப்புற பெண்களின் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் வழங்க அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தினோம் அதன் பலனாக இன்று கிராமப்புற பெண்களின் பொருளாதார நிலை உயர்ந்துள்ளது எனவும் உலகமே வியந்து பாராட்டும் திட்டமாகவும் அமைந்துள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நபார்டு வங்கியின் முன்னோடி திட்டமான நீர்வாடி பகுதி மேம்பாட்டு திட்டமானது இந்தியா முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் தட்டுப்பாடு குறைந்துள்ளது மேலும் பண்ணை குட்டைகள் அமைப்பதினால் வேளாண் சாகுபடி பரப்பளவு உயர்ந்த உற்பத்தி திறனும் அதிகரிக்கப்பட்டுள்ளது இந்த திட்டம் துவங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்குள் வளர்ச்சிப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த பின்பு தொடர் செயல்பாடுகளை நீர்வாடி பகுதி இடம் ஒப்படைக்கப்படுவதால் திட்டம் மக்கள் திட்டம் என்று அழைக்கப்படுகிறது மேலும் இத்திட்டத்திற்கு நிறைவு நாள் என்பதே கிடையாது என்று கூறினார்.
முன்னதாக சுய உதவி குழு பெண்களுக்கு நாட்டுக்கோழிகள் மரக்கன்று, பழக்கன்றுகள் மற்றும் உயிர் உரங்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சூரிய கூடார உலர்த்தி திறந்து வைத்ததன் நினைவாக அதன் அருகில் மரக்கன்று ஒன்றை நட்டு வைத்தார்.திறப்பு விழாவிற்கு geyimedicals.es பின் நிர்வடிப் பகுதியில் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகள் மற்றும் சீரமைப்பு பணிகளை களப்பார்வை செய்தார் பணிகள் அனைத்தும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது என கிராம நிர்வாக பகுதி கமிட்டி மற்றும் விடியல் டெஸ்ட் நிறுவனத்தை வெகுவாக பாராட்டினார் மேலும் ஏர்வாடி பகுதியில் திட்டம் நிறைவு பெற்றாலும் அதனை தொடர்ந்து மக்கள் பயன்பெறும் வகையில் சின்னோர் நீர்வாடி பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள வேளாண்மையுடன் கூடிய கால்நடை வளர்ப்புவர்களை இணைத்து விடியல் பண்ணை உழவர் உற்பத்தியாளர் தமிழ் லிமிடெட் துவங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.
நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், வாழ்த்துரை வழங்கினார். நாபார்டு வங்கியின் திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட வளர்ச்சி மேலாளர் சசிகுமார் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.விடியல்டிரஸ்ட் நிர்வாக இயக்குனர் ஜோதிமணி சிறப்பு விருந்தினர்களை வரவேற்று பேசினார். சின்னூர் கிராம நிர்வாடி பகுதி குழு தலைவர் அருண், திட்ட மேலாளர் அசோக் குமார் மற்றும் விடியல் டிரஸ்ட் களப்பணியாளர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.திட்ட மேலாளர் செந்தில்குமார் விழாவின் முடிவில் நன்றிகூறினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
விளாத்திகுளம் நிருபர்
பூங்கோதை