தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், வில்வமரத்துப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்,தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் அவர்களும், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களும் கிராமத்தின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
மேலும் வில்வமரத்துப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெண்கள் பயன்பெறும் வகையில் HCL நிறுவனத்தின் சார்பாக மின்மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் தையல் மையத்தினை மாண்புமிகு.சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன் அவர்களும்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் G.V.மார்கண்டேயன் அவர்களும் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் மகளிர் திட்ட அலுவலர் வீரபுத்திரன் கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன்கிறிஸ்டிபாய் விளாத்திகுளம் வட்டாட்சியர் ராமகிருஷ்ணன் விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தங்கவேல், சீனிவாசன் மாநில நெசவாளர் அணி துணைச் செயலாளர் வசந்தம் A.Cஜெயக்குமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு வில்வமரத்துப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சின்னபொண்ணு விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து புதூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் செல்வராஜ் புதூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மும்மூர்த்தி விளாத்திகுளம் பேரூர் கழகச் செயலாளர் வேலுச்சாமி விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யாஅய்யன்ராஜ் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நடராஜன் HCL முகுன்குமார் ஒன்றிய குழு உறுப்பினர் சுமதிஇம்மானுவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் பாண்டியராஜன் மாவட்ட பிரதிநிதிகள் ராமலிங்கம்,
கனகவேல் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறியாளர் அணி துணை தலைவர் சென்ராயப்பெருமாள் தூத்துக்குடி வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் கேப்டன்கேசவன் தூத்துக்குடி வடக்கு மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் நீதிராஜன் கிளைச் செயலாளர்கள் ராஜேந்திரன், சித்தமல்லு வார்டு செயலாளர்கள் அய்யனார், ஸ்டாலின்கென்னடி,சுப்புராஜ், மாரிராஜ் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ஜஸ்டின்பிரபாகரன் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய சமூக வலைதள அணி அமைப்பாளர் பாலகணேஷ் உட்பட அரசு அதிகாரிகள், கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-பூங்கோதை, விளாத்திகுளம்.