கோவை மாவட்டம் வால்பாறை பகுதியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட எஸ்டேட் பகுதிகள் உள்ளன இங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மாத மாதம் சம்பளத்தொகை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
அவ்வாறு வரவு வைக்கப்படும் பணத்தை தங்களுக்கு தேவையான நேரங்களில் எடுக்க தொழிலாளர்கள் செல்லும் பொழுது ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாமலும், அவை செயல்படாமல் இருப்பதாலும் பணம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். ஏடிஎம் மையங்களின் நிலை இவ்வாறு இருப்பதால் பணம் இருக்கும் சமயங்களில் கூட்டம் அதிகமாகி நீண்ட வரிசையில் நின்று பணம் எடுக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர் இதனால் தொழிலாளர்கள் பணம் எடுக்க வரும் நாட்களில் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலையும் ஏற்படுகிறது.
வால்பாறையில் தற்பொழுது இந்தியன் வங்கி, யூனியன் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஆகிய மூன்று ஏடிஎம் மையங்கள் உள்ளன இதில் வாட்டர் பால், ஐயர் பாடி, ஸ்டான்ஸ்மோர் சந்திப்பு, ரவி ஸ்டோர் அருகே உள்ள பகுதிகளில் தனியார் ஏடிஎம் மையம் உள்ளது அங்கு எல்லாம் பணம் தீர்ந்து விட்டால் ஏடிஎம்மில் பணம் நிரப்ப காலதாமதம் ஆகின்றது எப்பொழுது பணம் நிரப்புவார்கள் என்ற தகவலும் தெரிந்து கொள்ள முடிவதில்லை.
கடந்த மூன்று நாட்களாக யூனியன் வங்கி ஏடிஎம் மையத்தில் மிஷினரி பழுதாகிவிட்டது என்ற காரணத்தால் பூட்டி வைத்துள்ளார்கள். மேலும் எழுதப் படிக்க தெரியாத தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் ஏடிஎம் அட்டையை கொடுத்து பணம் எடுக்க முயலும் பொழுது ஒரு சிலரால் ஏமாற்றப்படுகின்றனர். இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கின்றன இது பற்றி வங்கி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
எனவே இது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து ஏடிஎம்மில் பணம் எடுக்க வரும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களின் குறைகளை போக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன், திவ்ய குமார்.