10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் 22-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் -ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 282 ரன் எடுத்தது. அந்த அணியின் பாபர் அசாம் மற்றும் அப்துல்லா ஷபிக் அரைசதம் அடித்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
வெற்றிபெற 283 ரன் என்ற கடின இலக்குடன் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் தொடக்கத்தில் இருந்து நிதானமாக விளையாடியது. 49வது ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
-அருண்குமார் கிணத்துக்கடவு.