கோவை மாவட்டம். போத்தனூர் 99 வது வார்டுக்கு உட்பட்ட ஸ்ரீராம் நகர் பகுதியில் உயர்மின் செல்லுலார் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். அங்கு வசிக்கும் பொதுமக்கள் கூறுகையில் இந்தப் பகுதி மிகவும் சுற்றுச்சூழல் மிகுந்த பகுதியாகவும் வாழ்வதற்கு தகுதியான பகுதியாகவும் இருந்து வந்த நிலையில்,
கடந்த பல வருடங்களாக குப்பைகள் கொட்டப்பட்டு பெரும் சிரமத்துக்கு உள்ளாகி பல்வேறு நோய்களை சந்தித்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க இப்பொழுது செல்லுலார் உயர்கோபுரம் அமைத்தால் அங்கு வசிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் நோய் பரவும் அபாயம் உள்ளதாகவும் கூறுகின்றனர்.
மற்றும் சிட்டுக்குருவிகள் தேனீக்கள் பறவைகள் போன்றவை உயிர் இழக்கும் அபாயம் உள்ளதாகவும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பல்வேறு பிரச்சனைகளுக்கு உள்ளாகப்படுவார்கள். என்று அச்சப்படுகின்றனர். இதனால் இந்த அலைபேசி உயர் மின் அழுத்த கோபுரத்தை இந்தப் பகுதியில் இருந்து அகற்ற வேண்டும் என்றும் இல்லையெனில் அந்தப் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தப் போவதாகவும் கூறுகின்றனர். இதனை மாவட்ட ஆட்சியர் கவனத்தில் எடுத்துக் கொண்டு இந்த உயர்மின் கோபுரத்தை அகற்றி தர வேண்டும் என்று அந்தப் பகுதி பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக தலைமை நிருபர்,
-ஈசா.