விவசாயிகளின் நலனுக்காக மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன, அதன் அடிப்படையில் அவர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. விதை முதல் வேளாண் இயந்திரங்கள் வாங்குவது வரை விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
அதான் தொடர்ச்சியாக தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பேட்டரி ஸ்பிரேயர் 50% மானிய விலையில் விவசாயி கண்ணன் அவர்களுக்கு ஓட்டப்பிடாரம் ஒன்றிய சேர்மன் திரு. ரமேஷ் அவர்கள் வழங்கினார்கள்.
இந்த நிகழ்வின் போது வேளாண்மை அலுவலர் திருமதி. ரா. சிவகாமி மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் கலா மற்றும் பவானிஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
ஒட்டப்பிடாரம் நிருபர்,
-முனியசாமி.