13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் 37-வது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.
நடப்பு சீசனில் விளையாடிய 7 ஆட்டங்களிலும் தோல்வியே சந்திக்காத இந்திய அணி 14 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தென்ஆப்பிரிக்க அணி 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, ஒரு தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்று அரைஇறுதியை உறுதி செய்து விட்டது. இவ்விரு அணிகளும் இதுவரை 90 ஒருநாள் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் தென்ஆப்பிரிக்கா 50 ஆட்டத்திலும், இந்தியா 37 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது. உலகக் கோப்பையில் 5 முறை மோதியதில் 3-ல் தென்ஆப்பிரிக்காவும், 2-ல் இந்தியாவும் வெற்றி கண்டுள்ளன.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் :
இந்தியா :ரோகித் ஷர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), சுப்மான் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ். தென் ஆப்பிரிக்கா :குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), டெம்பா பவுமா (கேப்டன்), ரஸ்ஸி வான் டர் துஸ்சென், எய்டன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, கேசவ் மகாராஜ், ககிசோ ரபாடா, லுங்கி என்கிடி.
-அருண்குமார் கிணத்துக்கடவு.