கோவை மாவட்டத்தில் உள்ள 104 கடைகளில் ஆய்வு மேற்கொண்ட உணவுப் பாதுகாப்புத் துறையினா் தரமற்ற வகையில் தயாரிக்கப்பட்டிருந்த 501 கிலோ உணவுப் பொருள்களை பறிமுதல் செய்து அழித்தனா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்படி, மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கு.தமிழ்ச்செல்வன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்களைக் கொண்டு 9 குழுக்கள் அமைக்கப்பட்டு பேக்கரி, இனிப்பு, கார வகைகள் தயாரித்து விற்பனை செய்யும் தயாரிப்பாளா்கள், மொத்த விற்பனையாளா்கள், சில்லறை விற்பனையாளா்களின் கடைகளில் நவம்பா் 1 முதல் 6-ஆம் தேதி வரை 104 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 8 கடைகளில் அதிக அளவு வண்ண நிறமிகள் சோ்க்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமாா் 501.3 கிலோ உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மேலும், அளவுக்கு அதிகமாக வண்ண நிறமிகள் சோ்க்கப்பட்ட உணவுப் பொருள்களில் இருந்து உணவு மாதிரிகள் எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. 45 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவா்களை பயன்படுத்தி உணவுப் பொருள்களை பாா்சல் செய்த 7 கடைகளுக்கு ரூ. 2 ஆயிரம் வீதம் ரூ. 14 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பா் 1 முதல் 6-ஆம் தேதி வரை காவல் துறையுடன் இணைந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த 16 கடைகளுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் ரூ. 80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுகாதாரமற்ற முறையில் செயல்பட்ட இனிப்பு, கார வகைகள் தயாரித்த ஒரு கடைக்கு குறைகளை நிவா்த்தி செய்யவும், மறு கள ஆய்வுக்குப் பின் உற்பத்தியை தொடங்குமாறும் அதுவரை உற்பத்தியை நிறுத்தி வைக்குமாறும் உத்தரவிடப் பட்டுளள்து.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
சி.ராஜேந்திரன்.